செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,23.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

கறுப்பு ஜூலைக் கொடூரத்தின் நினைவழியா நாள்கள் இவை...!.27.ஆம் ஆண்டுப் பூர்த்தி வேளையில் தமிழினம் இன்று நிற்கின்றது.

கறுப்பு ஜூலை(ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட,சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட,கொல்லப்பட்ட(400-3000.பேர்வரை,உறுதி செய்யப்பட வில்லை)ஒரு துன்பவியல் நிகழ்வு துன்பவியல் நிகழ்வாகும்.இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13.இலங்கை இராணுவத்தினரை திருநெல்வேலி-யாழ்ப்பாணத்தில் (திருநெல்வேலி தாக்குதல்) படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபொழுதும்,இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது.கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுத போராட்டமாக மாறக் காரணமானதாக பார்க்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்:

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட முக்கிய தலைவர்கள்:குட்டிமணி,தங்கத்துரை,ஜெகன்

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைகக்ப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.

இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர்களின் தேசிய ஆன்மாவையே ஓர் உலுப்பு உலுப்பி, அதில் ஆழமான வடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலைக் கலவரத்தின் "நினைவழியா நாள்கள்" இவை.
சுமார் மூவாயிரம் அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காவு கொண்டு, தமிழர்களின் சுமார் பத்தாயிரம் வீடுகளையும், பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்களையும் தீக்கு இரையாக்கி சாம்பல் மேடாக்கி, கணக்கு வழக்கில்லா சொத் துக்களை நாசமாக்கி, பெரும் பூகம்பமாய் தென்னிலங்கையில் வெடித்து அடங்கிய இனக் கலவரத்தின் 27.ஆம் ஆண்டுப் பூர்த்தி வேளையில் தமிழினம் இன்று நிற்கின்றது.

சிங்கள ஆட்சிப் பீடத்தின் பின்புல ஆதரவோடு திட்ட மிடப்பட்டு, தென்னிலங்கைத் தமிழர்களைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் விதத்தில் கட்டவிழ்த்து, ஏவி விடப்பட்ட இந்தக் கொடூரமே இலங்கைத் தீவில் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்பினரிடையேயும் நிரந்தர விரிசலுக்கு நித்திய முரண்பாட்டுக்கு உரமுள்ள அத்திவாரமாயிற்று.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களும், சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் புரிந்துணர்வோடு, பரஸ்பர இணக்கத்தோடு சகோதரர்களாக வாழலாம் என்ற நம்பிக்கை நிரந்தரமாக மரணித்துப்போய் அதை ஆழப் புதைக்கும் சவப்பெட்டியின் இறுதி ஆணியாகக் கறுப்பு ஜூலைக் கலவரம் தைக்கப்பட்டது.

தங்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை அவாவை விருப்பை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமோ வென்றெடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையைத் தமிழர் நெஞ்சங்கள் எங்கும் ஆழப் பதித்து, அவர்களின் உரிமைக்கான போராட்டப் பாதையை ஆயுத வழிக்கு நெட்டித் தள்ளியதே இந்தக் கறுப்பு ஜூலைக் கொடூரம்தான் என்றால் அது மிகையாகாது.

அன்று 1983 ஜூலை மூன்றாம் வாரத்தின் முடிவில் இலக்கு வைத்துத் தாக்கிக் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் இரத்தத்தோடு இலங்கையில் ஓடத் தொடங்கிய குருதி ஆறு, கடந்த 27 ஆண்டுகளாகப் பெரும் பிரளயமாக இத்தீவை அதில் மூழ்கவைத்து இப்போதுதான் சற்று ஓய்வுக்கு வந்திருக்கின்றது எனக்கொள்ளலாம்.

ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் அடிப் படைப் பிரச்சினைகளுக்கு முடிவோ, நியாயமான அபிலாஷைகளுக்கு நீதியான தீர்வோ, அடக்குமுறையிலிருந்து விடுதலையோ இன்னும் கிட்டியபாடாகவில்லை.

இன்னும் விரிவாகச் சொல்வதானால் அன்று சட்டியில் இருந்தபடி அடக்குமுறைத் தீயில் வெந்தவர்கள் இன்று நேரடியாக அடுப்புக்குள் வீழ்ந்து கருகிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் தமிழர்களின் கதையாக கதியாக உள்ளது.

ஜனநாயக மிதவாத அரசியலிலும் தோற்றுப்போய், ஆயுதப் போராட்டத்திலும் பின்னடைவு கண்டு, அநாதர வான நிலையில் தவித்துப் போய் நிற்கின்றது தமிழினம். இந்த நிர்க்கதி நிலையின் வெப்பியாரம் ஒவ்வொரு தமிழனினதும் மனதையும் நெருப்பாகச் சுட்டு உள்ளே தீயாகக் கனல்கின்ற போதும் அதை வெளிப்படுத்திப் பிரதிபலிப் பைக் காட்டக்கூட வக்கின்றி வாடும் அவலத்தில் அவர்கள்.

1983 ஜூலையில் எரிமலையாய் வெடித்து, சூறாவளியாய் அனர்த்தங்களை விளைவித்து அடங்கிப்போன இன வன்முறைகளை அடுத்துத் தமிழினம் எப்படி வேதனையில் துவண்டு கிடந்ததோ, அதே நிலைமைதான் அந்த இனத்துக்கு இன்றும். வன்னியில் பெருங் கொடூரமாக பிரளய மாக வெடித்து அடங்கிய கோர யுத்தத்தின் இறுதியில் அப் படித்தான் உருக்குலைந்து, வாடி வதங்கிக் கிடக்கின்றது தமிழினம்.

அன்று தென்னிலங்கையில் உறவுகளை, உடைமை களை, உயிர்களைத் தொலைத்துத் தமிழர் தாயகத்துக்கு ஏதிலியாக வந்த தமிழர்கள் இன்று தமிழர்களின் தாயகப்பூமியிலேயே அகதிகளாக முள் வேலிகளுக்குப் பின்னால் லட்சக் கணக்கில் முடக்கப்பட்டுக்கிடக்கும் பேரவலம்.

1983 ஆடிக் கலவரத்துக்குப் பின்னர் பத்து லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர். நாட்டுக்குள்ளேயே சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இடம்பெயர வைக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. பல்லாயிரக் கணக்கானோர் அவயவங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். சொத்து, உடைமை அழிவோ கணக்கில் அடங்காதது; எண்ணிப் பார்க்க இயலாதது. கல்வி, பாரம்பரியம், விழுமியம் என்ற உயர் பண்பியல்புகளில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தலை முறை, தலைமுறையாக சந்ததி, சந்ததியாக பெரும் பின்னடைவையும் பாதிப்புகளையும் தமிழனுக்குத் தந்து நிற்கின்றன.

மேற்படி கறுப்பு ஜூலைக் கலவரம் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நேரடியான தலையீட்டுக் கான இடைவெளியையும், பொருத்தமான புறநிலையையும், தகுந்த நியாயப்பாட்டையும் அச்சமயத்தில் தந்து நின்றது.

ஆனால் அதைக் கையாள்வதில் தனது புவியியல் நலன் சார் விடயங்களை மட்டும் முன்னிறுத்திய புதுடில்லியின் போக்கு தன்கையைத் தானே சுட்டுக்கொள்ளும் மோசமான அனு பவத்தை பட்டறிவை அதற்குக் கொடுத்தது.

அந்த வரலாற்றுத் தவறு காரணமாக, கறுப்பு ஜூலைக் கலவரத்துடன் ஆரம்பமான இலங்கை மீதான இந்தியாவின் நேரடித் தலையீடு, 1990 மார்ச் மாதம் இலங்கையில் தமிழ் பகுதியை அதுவரை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகளின் விலகலோடு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் அண்மைக்காலத்தில் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் மறைமுகமாகப் பங்கு கொண்டதன் மூலம் மீளவும் தீவிரமடையத் தொடங்கிய இலங்கை மீதான இந்திய ஈடுபாடு இப்போது, வன்னியில் சிக்குண்டுள்ள மூன்று லட்சம் தமிழ் அகதிகள் விடயம், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டிய கொழும்பின் பொறுப்பில் புதுடில்லியின் கடப் பாடு ஆகியவை காரணமாக மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

கறுப்பு ஜூலைக் கலவரத்தை அடுத்து கட்டவிழ்ந்த விடயங்களில் தவறிழைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட புது டில்லி, இனியாவது இப்போது கிடைத்துள்ள இந்தச் சந் தர்ப்பத்திலாவது நேர்மையாகவும், நீதியாகவும் செயற்பட்டுத் தமிழர்களுக்கு நியாயம் கிட்ட வழி செய்யுமா.....?

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!