இலங்கை
அரசியல் யாப்பில் 13வது திருத்தம்
பற்றி அறிந்திராதவர்களே வீண் விமர்சனம்
இலங்கை
அரசியல் யாப்பில்
உள்ளடக்கப்பட்டி ருக்கும்
13வது திருத்தம் பற்றிய போதிய
அறிவில்லாதவர்களே அதுகுறித்து
வீணாக அச்சமடைகிறார்கள். நாடு
பிளவுபடுவதனை தவிர்க்கும்
முகமாக அதில் அதிகார
பரவலாக்கமே
வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது
எமது நாட்டிற்கு பொருத்தமாக
அமைவதுடன் இக்கொள்கையிலேயே
நான் அன்றும் இன்றும்
உறுதியாக விருக்கிறேனென
மீன்பிடி மற்றும் நீரியல்
வளத்துறை அமைச்சர் டாக்டர்
ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அதிகார பரவலாக்கல் முறைமையை
அமுல்படுத்துவதன் மூலம்
முதலமைச்சர் களின் கரங்கள்
பலப்படுத்தப்படும். 13வது
திருத்தம் பற்றி சரியாக
அறிந்து வைத்திராதவர்களும்
அதுகுறித்து
வாசித்திராதவர்களும், 13வது
திருத்தத்தை அமுல்படுத்துவதன்
மூலம் நாடு இரண்டாக பிளவுபடப்
போவதாக நினைத்து வீணாக
அச்சமடைந்துள்ளார்கள்.
அரசியல் யாப்பில்
உள்ளடக்கப்பட்டிருக் கும்
13வது திருத்தத்தில்
அதிகாரத்தை பிரித்துக்
கொடுப்பது பற்றி தெளிவாக
கூறப்பட்டுள்ளது. இதன் மூலம்
அதிகாரம் பிரித்து
வழங்கப்படுகிறது.
முதலமைச்சர்கள் மிகவும்
பொறுப்புடையவர்களாகிறார்கள்.
இந்தக் கொள்கை முறை எனக்கு
மிகவும் பிடித்தமானது. நான்
அன்றிலிருந்து இன்று வரை
இதேகொள்கையிலேயே
உறுதியாகவிருக்கிறேனெனவும்
அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.
இலங்கை மீன்பிடி
கூட்டுத்தாபனத்தின் 106வது
விற்பனை நிலையத்தினை நேற்று
அநுராதபுரத்தில் திறந்து
வைத்து உரையாற்று கையிலேயே
அமைச்சர் மேற்கண்டவாறு
கூறினார்.
நாடளாவிய ரீதியில் மீன்
விற்பனை கூடங்களின்
எண்ணிக்கையினை 51 இலிருந்து
107 வரை அதிகரிப்பதே அமைச்சின்
இலக்காகும். 2018 ஆம் ஆண்டில்
இவ்வாறான 250 மீன் விற்பனை
நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு
அமைச்சர் யோசனை
முன்வைத்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக 209 லக்
சதொச நிறுவனம் 20 கோப்சிட்டி
மற்றும் சுப்பிரி விற்பனை
நிலையங்களிலும் மீன் நியாயமான
விலைகளில் விற்பனை
செய்யப்பட்டு வருகின்றது. ஒரு
விற்பனை நிலையத்தினை
ஸ்தாபிப்பதற்கு சுமார் 15
இலட்சம் ரூபா வரை செலவாகின்றது.
நாட்டு மக்கள் மற்றும் வளரும்
குழந்தைகளுக்கு தேவையானளவு
மாமிச புரதத்தினைப் பெற்றுக்
கொடுக்கும் நோக்கில் புதிய
மீன்களை நியாயமான விலையில்
அனைவருக்கும் கிடைக்கக் கூடிய
வகையிலுமே இந்த விற்பனை
நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு
வருவதாகவும் அமைச்சர் இதன்போது
கூறினார்.