இலங்கை
வந்திருக்கும் கலாநிதி அப்துல்
கலாம்,முன்னிலையில்'மும் மொழி
அங்குரார்ப்பணம் நிகழ்வு.
'மும்மொழி
இலங்கை' செயற்திட்டம் இன்று
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அலரி மாளிகையில் நடைபெற்ற
அங்குரார்ப்பண நிகழ்வில்
இந்திய முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம், ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவும் ஆகியோர்
இத்திட்டத்தை ஆரம்பித்து
வைத்தனர்.
இவ்விழாவில் கலாநிதி அப்துல்
கலாம் உரையாற்றுவதையும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
அமைச்சர்கள், வெளிநாடுகளின்
தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள்,
பாடசாலை மாணவர்கள் ஆகியோரையும்
படங்களில் காணலாம்.
இவ்விழாவில் தெல்தெனிய மத்திய
மகா வித்தியாலய மாணவி
டபிள்யூ.ஏ.லக்மாலி தில்ருக்ஷி
விஜேசூரிய தமிழில்
நன்றியுரையாற்றினார். முந்தல்
தமிழ் வித்தியாலய மாணவி ஆர்.
சஹனா சிங்களத்தில்
நன்றியுரையாற்றினார்.
அக்கரைப்பற்று முஸ்லிம்
மகாவித்தியாலய மாணவி பாத்திமா
ஜெமீமா ஆங்கிலத்தில்
நன்றிரையாற்றினார்.