செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 20,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

மக்களின் தேவைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கான செயற்பா டுகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

Bookmark and Share
மீள்குடியேற்றத்தின் பின் மாவட்டத்தின் அனைத்து துறைகளும் ஆரம்பக் கட்டத்திலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளன. இருப்பினும் மக்களின் தேவைகள் அதிகமாக இருப்பதானால் குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.  எனவே  2012ஆம் ஆணடில் இச் செயற்பாடுகளை  மேலும் துரிதப்படுத்தி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று (20) கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மீள்குடியேற்றத்தின் பின் கிளிநொச்சி மாவட்டம் படிப்படியாக அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது  கடந்த ஆண்டு கல்வித்துறையில் மிகப் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பாடசாலைகளில் காணப்பட்ட வளப்பற்றாக் குறைகளில் பெரும் பகுதிக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

விவசாயத்தை பொறுத்த வரையில் மாவட்டத்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு கரைச்சி பிரதேசத்தின் அனைத்து வயல் நிலங்களிலும் நெல் செய்யைபண்ணப்பட்டுள்ளது. இதேவேளை  பாரிய குளங்கள் சிறிய குளங்கள் உட்பட பல குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு வயல் நிலங்களுக்கான  நீர்ப்பாசன வசதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. மேலும் மேட்டு நில விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக சமூகத்தில் வாழ்வாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது. இதேவேளை கடற்றொழிலிலும் நன்நீர் மீன்பிடியிலும் கணிசமான முன்னேற்றத்தை மக்கள் எட்டியுள்ளனர்.

மின்சார விநியோகத்தை பொறுத்த வரையில் ஆரம்பக் கட்டத்திலிருந்து அவற்றை செயற்படுத்த வேண்டியிருந்ததால் முழுமையாக இணைப்புக்களை வழங்க முடியாது போனது. இருப்பினும் கணிசமான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல இணைப்புக்களை உடனடியாக வழங்குவதற்கான செயற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன.

அத்தோடு யுத்த காலத்தில் இப்பகுதியில் இயங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களுடன் மேலும் பத்து நிறுவனங்கள் இப்பகுதியில் பணியாற்ற முன்வந்துள்ளன.

இதேவேளை உள்@ராட்சி சபைகளின் செயற்பாடுகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு கூட்டுறவுச் செயற்பாடுகளும் மேம்பட்டு வருகின்றது.

எனவே மீள்குடியேற்றத்தின் பின் மாவட்டத்தின் அனைத்து துறைகளும் ஆரம்பக் கட்டத்திலிருந்து முன்னேற்றங் கண்டுள்ளன. இருப்பினும் மக்களின் தேவைகள் அதிகமாக இருப்பதனால் குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.  எனவே  2012ம் ஆணடில் இச் செயற்பாடுகளை  மேலும் துரிதப்படுத்தி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.  எனவே அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

அதிலும் சில செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் உணர்கின்றோம். அதில் மக்களின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் செயற்பாடு அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. மாவட்டத்தில்  24 ஆயிரம் வரையான நிரந்தர வீடுகள் கடந்த கால போரினால் அழிந்து போயுள்ளன.  அதில் 8300 வரையான வீடுகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டில் இந்திய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் மேலும் அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களுக்கு ஊடாகவும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் கல்வி வீடமைப்பு வீதி அபிவிருத்தி விவசாயம் நீர்ப்பாசனம் போக்குவரத்து சுகாதாரம் மின்சாரம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் என ஒவ்வொரு துறையாக விரிவாக ஆராயப்பட்டு மக்கள் அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு பிரச்சினைகள் தேவைகள் காணப்படும் இடத்து வருகை தந்துள்ள உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வுகளும் காணப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் கரைச்சி பிரதேச சபையின் தலைவர் குகராஜா கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் திணைக்களங்கள் சபைகளின் அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 


















 

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!