செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 20,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்  அமெரிகாவும் – இன்னொரு முறை ஓர் பார்வை.

Bookmark and Share

இப் படத்தில் உள்ளவர்கலை உற்றுப் பாருங்கள் இவர்களா தமிழ் மக்களின் தலைவர்கள்.இன்று தமிழர்கள் யுத்தத்தின் பின் ஓளுங்கான உணவிண்றி உடையின்றி கட்டிய கோமனத்தையும் பறிகொடுத்து நிற்கும்போது.இவர்களுக்கு மட்டும் கோட்டு சூட்டும் களித்தில் ரயியும். தமிழ் மக்கள் எனியாவது சிந்தியிங்கள்!

இரத்தக் கறைகளோடு அறுபது ஆண்டுகள் கடந்து போயின. தென்னாசியாவின் பேசப்படாத மூலையில் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பேரினவாத இரத்தப்பசிக்கு இரையான வரலாறு கடந்துபோன ஆறுபது தசாப்தங்களின் கறைபடிந்த வரலாறு.

இன்றைக்கு வரைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும், பாசிசத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்கள் போராடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை.

வன்னிப் படுகொலைக்குத் தப்பியவர்கள், குண்டுத்துகள்களைச் சுமந்த குழந்தைகளோடு தெருக்களில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

எண்பதுகளில் மக்கள் போராடுவதற்குத் தயாரானார்கள். இலங்கை முழுவதும் ஜெயவர்தன அரசை மக்கள் வெறுக்க ஆரம்பித்திருந்த காலம். எங்கே மக்கள் தலமை உருவாகிவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசிற்கு ஏற்பட்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியாவிற்குப் பயணம் செய்தது. தான் அறிந்த மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் என்று அமிர்தலிங்கத்தை இந்திரா காந்தி அழைத்த போது யாழ்ப்பாண மேட்டுக்குடியின் தேசிய உணர்வு உச்சமடைந்தது.

அப்ப்போதெல்லம் இந்தியாவிற்கு எதிராக மூச்சுவிடுவதற்குக் கூட இடம் தரப்படவில்லை. இந்தியாவைப் பிடித்து குறுக்கு வழியில் விடுதலை பெற்றுவிடலாம் என்றது யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனை. “எம்.ஜீ.ஆர் விடமாட்டர், இந்தியா ஓடிவரும், இலங்கை அரசு அழிக்கப்படப் போகிறது, நாங்கள் போராடுகிறோம் இந்தியா ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கை.

இந்திய அரசு ஆயுதங்களை வேறு அள்ளிவழங்கியது. பயிற்சிக்காக தமிழ் இளையோரைக் கேட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அறியப்பட்ட அனைத்து இயக்கங்களுக்க்கும் பயிற்சியையும் ஆயுதங்களையும் பகிர்ந்தளிததனர்.அதற்க்கு பின் ராஜீவ்காந்தியின் இலங்கை இந்தியா ஒப்பத்தம் தமிழர்களுக்கு கிடைத்த சந்தற்பம் பின் புலிகளின் பிற்போக்கு தனத்தால் தமிழர்களுக்கு ஏற்பட்ட அளிவுகள்.

இடையிடையே ஒவ்வோர் விடுதலை இயக்கங்கள் தமது சொந்த நலன்களுக்காக யாழ்ப்பாண மேட்டுகுடி மையவாத அடிப்படையில் உருவாகின.

யாழ் மையவாதச் சிந்தனை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள எதிரிகளை நண்பர்கள் என்று அடையாளப்படுத்துவதிலிருந்தே ஆரம்பமாகும். சமூகத்தில் போர்க்குணம் மிக்க போராடும் சக்திகளான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையை நிராகரித்து “ஒரே குடையின் கீழ்” அனைவரயும் அழைத்து, தமது தலைமையை உறுதிசெய்து கொள்ளும்.புலி இயக்கப் போராளிகள் தாடி வைத்துக் கொள்ளக் கூடாது என்றதும். யாழ்ப்பாணம் இதுவல்லவா ஒழுக்கம் என்றது. அவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்றதும் பக்தி தோய்ந்த தமிழ்க் கலாச்சரம் என்றார்கள். தூய்மை வாதம், ஒழுக்க முறைமைகள் என்று மேட்டுக் குடி வேள்ளாளர் சமூகத்திற்கே உரித்தான இயக்கமாக புலிகள் வளர்ச்சி பெறத் தொடங்கினர். புரட்சிக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பைவிட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிகளுக்கும் தொப்புள் கொடி உறவு நிலவியது. கூட்டணித் தலைவர்களைப் புலிகள் கொலை செய்தார்கள் என்பது வெறும் அதிகாரப் போட்டி மட்டும் தான்.

இதெல்லாம் ஏதோ பிரபாகரன் செய்த தவறென்று திட்டித் தீர்ப்பதல்ல நமக்குத் தேவை. அதற்கும் மேலான எமது சமூகத்தின் அதிகார வர்க்கத்தை அப்படியே உள்வாங்கியதன் எதிர்விளைவு தான் இது.

புலிகளால் பிற்காலத்தில் அழிக்கப்பட்ட வேவ்வேறு இயக்கங்கள் கூட தத்தமது வசதிக்கு ஏற்ப மேட்டுக்குடி சிந்தனையை உள்வாங்கிக் கொண்டு அதன் எஜமானர்களின் ஏவல்கள் போலத் தான் தொழிற்பட ஆரம்பித்தனர்.

மக்கள் அமைப்புகள் என்று வட கிழக்கு எங்கும் உருவாக்கிக் கொண்டது. நியாயப்படுத் துவதற்காக உருவாக்காப்பட அந்த அமைப்புக்களை மேட்டுக்குடிச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் வழி நடத்தினர். அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப ஆரம்பித்தனர்.

வறிய இளைஞர்கள் எல்லாம் முகாம்களில் உணவிற்காக வாடிக்கொண்டிருக்க, எதிர்காலத் தமிழீழத்தின் நிர்வாகிகளாகக் கனவு கண்ட மேட்டுக்குடி வேளாள இளைஞர்கள், நகரங்களதும் கிராமங்களதும் நிர்வாகிகளாகினர். மக்கள் அமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பிரச்சார அமைப்புக்களிலும் இதே நிலை தான். புலிகளிலிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதற்காக மட்டும் தம்மை இடது சாரிகளாக அடையாளப்படுத்திக் கொண்டது இந்த இளைஞர்கள் கூட்டம்.

புலிகளின் அதே மேட்டுக்குடி தூய்மைவாத சிந்தனையோடு ஈரோஸ், என்.எல்.எப்.ரி போன்ற பருமனில் சிறிதான ஆயுதக் குழுக்கள் உருவாகின. இவர்கள் கூட அதே சிந்தனையை வெவ்வேறு அளவுகளில் கொண்டிருந்தனர்.

இலங்கை அரசின் இன்றுவரை தொடரும் ஆயுத அடக்குமுறையோ இந்த எல்லா அழுக்குகளையும் அப்படியே விட்டுவைத்திவிட்டு மனித உயிர்களை மட்டுமே காவுகொண்டது.

இந்த நீண்ட சோக வரலாறு முப்பது ஆண்டுகாலக் கால எல்லையைக் கொண்டது. மாற்றங்கள் பலவற்றை உருமாற்றியிருக்கிறது. நமது சிந்தனை மட்டும் ஒரு சுற்றுவட்டம் போல மீண்டும் சுழன்றுகொண்டிருக்கிறது.இந்த நீண்ட சோக வரலாறு முப்பது ஆண்டுகாலக் கால எல்லையைக் கொண்டது. மாற்றங்கள் பலவற்றை உருமாற்றியிருக்கிறது. நமது சிந்தனை மட்டும் ஒரு சுற்றுவட்டம் போல மீண்டும் சுழன்றுகொண்டிருக்கிறது.

சில வியாபாரிகளையும், மேலதிகமான திருடர்களையும், மன நோய் கொண்டவர்களையும் உருவாக்கியிருப்பது தான் புதிய மாற்றங்களாகக் கருதிக்கொள்ளலாம்.இப்போது ஒரு முழுச் சுற்று முடிந்து புதிய சுற்று ஆரம்பமாகியிருக்கிறது. ஒரு வேறுபாடு: சுழல்கிற வேகத்தைப் பார்த்தால் அழிக்கப்படுவதற்கு 30 ஆண்டுகள் தேவைப்படாது. சில குறுகிய வருடங்களே போதும்.

இந்தியாவை அமரிக்காவும் மேற்கு நாடுகளும் நிரப்பியுள்ளன. சீ.ஐ.ஏ என்ற பயங்கரவாத அமைப்பின் சிலந்தி வலைக்குள் தமிழ் மேட்டுக்குடித் தேசியம் சிக்க வைக்கப்பட்டுள்ளது, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சிந்தனையால் உள்வாங்கப்பட்ட சிந்தனை சிதைவடைந்த சமூகத்தின் ஒரு பகுதி சம்பந்தர், சாதனை செய்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது.

வரலாறு மட்டும் தனது மறு பதிப்பை ஆரம்பித்துள்ளது.எண்பதுகளில் அழிவுக்ககுக் காரணமான யாழ் மேட்டுக்குடி வேளாள மையவாததின் காவு கருவிகளாகத் தொழிற்பட்ட அத்தனை அழிவு சக்திகளும் இன்று களத்தில் வெவ்வேறு நிலைகளில் இயங்குகின்றன. அதே அழிவுக்கான சிந்தனையோடே அவர்கள் தமது அடையாளத்திற்காவும், அந்த அடையாளம் உருவாக்கும் வியாபார அரசியலுக்காகவும் பல்வேறு தளங்களில் இவர்களின் இயக்கம் காணப்படுகிறது. 

அரசியல் வியாபாரப் போட்டியில் மனிதப் பிணம் தின்பவர்கள் போல முட்டி மோதிக் கொள்கிறார்கள். அருவருக்கத் தக்க வன்முறைகள் கருத்துத் தளத்திலிருந்து நேரடி மோதல்வரை எல்லா தளங்களிலும் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் தேசியம், புனிதம், தூய்மை என்ற வார்த்தைகள் அடைக்கலம் கொடுக்கின்றன.

அமரிக்காவில் சம்பந்தன் குழு காலடி வைத்த அதே நாளில் அமரிக்க அரசிற்கு எதிராகப் போராடியவர்களை மிலேச்சத் தனமாக தனது மக்கலை அடக்கியுள்ளது. அமரிக்க அரசு ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் லிபியாவையும் ஆக்கிரமித்து அமரிக்க நடத்திய தாக்குதலில் இலைச்சக் கணக்கானோர் பலியாகியுல்லனர். பாஹ்ரெயினிலும், யெமெனிலும் அமரிக்க விசுவாச ஆட்சியாளர்கள் மக்கள் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு முன்னதாக அமரிக்காவில் 1945 இற்குப் பின்னர் இவ்வளவு வறுமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கைகள் வந்தன. உலகத்தின் பெரும்பகுதி நாடுகளை ஏதோ ஒருவகையில் ஆக்கிரமித்து சீரழித்த அமரிக்கா, தன்னைத் தக்கவைத்துக்க்கொள்ள முடியாத நிலைக்கு வந்திருக்கிறது.

உலகத்தில் உரிமைக்காகப் போராடுகின்ற அத்தனை 95 வீதமானவர்கள் அமரிக்காவை கோரமான எதிரியாகத்தான் கணிக்கின்றனர். இவர்களுக்கு எல்லம் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய சார்புப் போராட்டமாக அறிவித்திருக்கிறது சம்பந்தன் குழுவின் வேளாள மேட்டுக்குடி அரசியல்.

கடாபியை சர்வாதிகரியாகவும், நில உடமை மனோபாவம் கொண்ட பிற்போக்கு வாதியாகவும் கணித்த உலக மக்களின் சிந்திக்கத் தெரிந்த நேர்மையான ஜனநாயகவாதிகள் கூட அமரிக்க ஆக்கிரமிப்பை அவர்களின் எண்ணைப் பசியை எதிர்த்து உலகம் முழுவதும் பிரச்சரங்களிம் போராட்டங்களும் மேற்கொண்டனர்.

உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஏகாதிபத்தியங்கள் தமது கொள்ளைக்காக நாசம் செய்துகொண்டிருக்கும் போதே மனிதாபிமானிகளும், ஜனநாயாகவாதிகளும், முற்போக்கு சக்திகளும் அழிக்கப்படும் மக்கள் சார்பில் குரல் கொடுக்கின்றனர். பலஸ்தீனியப் போராட்டம்; அத்தனை வல்லரசுகளும் இணைந்து கூட இன்றும் அழிக்கப்பட முடியவில்லை. ஏன நமது கொல்லைப்புறத்தி நடைபெறும் நாகாலாந்துப் போராட்டத்தையோ, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு இராணுவம் வீதம் குவிக்கப்ப்பட்டிருக்கும் கஷ்மீர் போராட்டத்தையோ, லத்தீன் அமரிக்க எழுச்சிகளையோ, ஐரோப்பிய நாடுகளின் போராட்டங்களையோ இன்றுவரை ஈழப் போராட்டத்தைப் போன்று துடைத்தெறிய முடியவில்லை.

இவர்கள் எல்லோருக்குமே நாங்கள் எதிரிகள் என்று முப்பது வருடமாகத் திருமபத் திரும்பச் சொல்லியிருக்கின்றோம். அவர்களை எதிரிகள் ஆக்கியிருக்கிறோம். வன்னிப் படுகொலைகளை அமரிக்கா செய்மதியில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த போது எமக்காகக் குரல் கொடுப்பதற்கு நண்பர்கள் இருக்கவில்லை. இன்று அமரிக்கக் கொலைகாரர்களின் அடுப்படி வரை சென்றிருக்கிறோம். நாளை ஈழத்தின் இன்னொரு மூலையில் இன அழிப்பு நடக்கும் போது சீனாவும் இந்தியாவும் ஆயுதம் வழங்க அமரிக்கா பார்த்து ரசிக்க இனவாத வியாபாரிகள் தேசியம் பேசிக் கொண்டிருப்பார்கள்.எமக்காகக் குரல்கொடுக்க யாரும் வரமாட்டார்கள். அப்படிக் குரல்கொடுக்க வல்லவர்களைத் தானே எதிரிகள் ஆக்கிக் கொள்கிறோம். அவர்களுக்குத் தானே நம் அமரிக்காவின் கைக்கூலிகள் என்று சொல்கின்றோம்.

யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடியின் தேசிய வியாபாரம் அத்தனை மக்களது கண்களையும் கட்டிவைத்துவிட்டு உலகம் முழுவதும் வீறு நடை போடுகிறது. ஊடகங்களுக்குச் “சூடான செய்திகள்” தேவைப்படுகிறது.

“தமிழீழம் விழிம்பில் இருக்கிறது, ராஜபக்ச கைதாகப் போகிறார், பிரபாகரன் உயிரோடிருந்து போராடத் தயாராகிறார், கிலாரி ஈழப் போராட்டத்திற்கு உதவி செய்கிறார்.. ” ; எத்தனை நம்பிக்கைகள்? எல்லாம் போலிகள். இவை எல்லாம் தமது வியாபாரத்தை நடத்த ஊடகங்களுக்குத் தேவை. தாங்கள் காய்களை நகர்த்துகிறோம் என்று கூறிக்கொள்ள தேசிய வியாபாரிகளுக்கு ஊடகங்கள் தேவை. ஏகாதிபத்தியங்களுக்கு இந்த வியாபாரிகள் தேவை. இவை எல்லாவற்றினதும் இறுக்கமான கூட்டு மட்டும் தான் இன்று ஈழப் பிரச்சனையை முன்வைத்து இயக்கம் பெற்றுள்ளது.

இவ்வாறான இணைவைத் தான் “ஒற்றுமை” என்று அழைக்கிறார்கள். இதன் மறுபக்கம் எமது நண்பர்களை எதிரிகளாக்குகின்றது. பள்ளிப்படிப்பையே அறிந்திராத பழங்குடி மக்களின் இந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச மயப்பட்ட அளவிற்கு, உலகு எங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் மத்தியில் பேசப்பட அளவிற்கு நமது போராட்டம் பேசப்படவில்லை.

யாழ்ப்பாண மேட்டுக்குடி அரசியல் எமக்குச் சொல்லிததந்த “சர்வதேசம்” அமரிக்காவும், ஐரோப்பாவும், இந்தியாவும் மிஞ்சிப் போனால் சீனாவும் மட்டும் தான். முள்ளிவாய்க்கால் மனிதப்பிணக்காடாய் காட்சி தந்த போது அவர்களின் “சர்வதேசியத்திற்கு” அழுத்தம் கொடுக்கவல்ல ஜனநாயக சக்திகளை எல்லாவற்றையும் அன்னியப்படுத்தியிருந்தோம். அமரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பி அழிந்து போயினோம்.

இதே அழிவிற்கான அத்திவாரம் இன்னொரு முறை மிகப்பலமாக சம்பந்தன் குழுவினால் அமரிக்காவில் இடப்படுக்கொண்டிருகிறது. இது எமது போராட்டத்தில் இன்னொரு இரத்தக்கறை. போராடும் மக்களின் அவமானம்ச் சின்னம்.எதிரிகளை அதிகரித்து அழிவிற்கான புதைகுழிகளை ஆழப்படுத்தும் செயற்பாடு. தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரைக்கும் நகர்த்திவந்து நந்திக்கடலை இரத்தம் தோய்ந்த செங்கடலாக்கினர்.

சட்டலைட்டில் கொலைகளை சுவைத்துக்கொண்டிருப்பவர்கள் இனித் தேவையில்லை. எங்களின் வலியை அறிந்து கொள்ளும் சட்டலைட் உரிமையாளர்களுகு எதிராகப் போராடுவோரே எமக்காகப் போராடுவார்கள். அவர்கள் எங்களின் நண்பர்கள் என்பதால் மட்டுமல்ல உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடுபவர்கள் என்பதா; நாங்களும் அவர்களோடு இணைவோம்.

நாம் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டவர்களானால் இந்த அழிவிற்கான சுவர்களை உடைத்துக்கொண்டு புதிய அரசியல் உருவாகும். யாழ் மேட்டுக்குடி அரசியல் அழிக்கப்படும். புதிய மக்கள் அரசியல் போராட்டத்தைத் தனது கைப்பற்றும்.

அவர்கள் நண்பர்களையும் எதிரிகளையும் இனம் கண்டுகொள்வர்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!