செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர்,01.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

உத்தேச திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசை வலியுறுத்துகிறது ஐ.தே.க.அரசிலுள்ள பலர் அதிருப்தியடைந்திருப்பதாக வும் சுட்டிக்காட்டுகிறது

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்து அரசியலமைப்புத்திருத்தத்துக்கு ஆதரவுகோரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று 2/3பெரும்பான்மையை பயன்படுத்திக் கொண்டு எத்தனை தடவைவேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரக்கூடிய விதத்தில் அரசியலமைப்பை மாற்றும் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்.ஜனநாயகத்துக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நேற்று அறிவித்தது.

ஜனாதிபதி உள்நோக்கத்துடன் செயற்பட்டு மீண்டுமொருதடவை ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்றிவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

"ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தூதுக்குழுவைச்சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழித்து பாராளுமன்றத்துக்குஅதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் விதத்தில் அரசியலமைப்புத்திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் அதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு சென்றோம். பலயோசனைகளும் முன்வைக்கப்பட்டன.இந்த நிலையில் இறுதியாக ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடரவேண்டுமென விரும்புவதாகவும் இரண்டுதடவைகள் என்ற அம்சத்தைமாற்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் போட்டியிடக்கூடியதாக அரசியலமைப்பை திருத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்ததோடு கட்சியின் முடிவுக்கு எதிராக தம்மால் செயற்பட முடியாதெனவும் தெரிவித்தார்.

உண்மையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியை மற்றொரு தடவை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்.2/3பெரும்பான்மையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவிதத்தில் எதிரணியிலிருந்து சிலரை எடுக்கும் முயற்சியையே அவர் மேற்கொண்டுள்ளார். ஜனநாயக அரசியல் கலாசாரத்துக்கு முரண்பட்ட விதத்தில் எதிரணிக் கட்சிகளை உடைக்கும் கலையை மகிந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும் இந்த அரசியலமைப்புத்திருத்த யோசனைக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.ஆளும் தரப்பில் கூட பலர் இந்த அரசியலமைப்புத்திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றன. ஜனாதிபதியின் சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூட தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அரசிலுள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆனால் எவராலும் எதுவும் பேச முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மக்களின் ஆணைபெறப்படவேண்டும். குறுக்குவழியில் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையை காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். அரசியலமைப்புத்திருத்தத்துக்கு மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த முன்வரவேண்டும்.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அனர்த்தங்கள் தொடர்பாக நாட்டுமக்களுக்கு விளக்கமளிக்கும் பேரணிகளை நாடுபூராவும் முன்னெடுக்க விருக்கின்றோம். எதிரணி அரசியல் சக்திகள்,சிவில்,சமய அமைப்புகளை உள்ளடக்கிய பொது அமைப்பொன்றை உருவாக்கி ஜனநாயகரீதியில் விவகாரத்தை அணுகி திட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசின் உத்தேச அரசியலமைப்புத் திருத்த நகலை ஐக்கிய தேசியக்கட்சி சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருகின்றது.இதனை முறியடிக்க சட்டரீதியாக செயற்படும் வழிகளை நாம் ஆராய்ந்துவருகின்றோம்.இது குறித்து இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும்’ எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!