செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர்,01.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

இலங்கையின் அபிவிருத்தி பணியில் வலது குறைந்தோர் புறக்கணிப்பு என்.ஜி.கமலாவதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி பணியில் வலது குறைந்தோர் புறக்கணிப்புஇலங்கையில் அனைத்து விதமான அபிவிருத்தி பணிகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதிலும் அவற்றில் வலதுகுறைந்தவர்களுக்கான திட்டங்களையும் இணைத்து நடைமுறைப்படுத்தவேண்டும் என வலதுகுறைந்த பெண்களுக்கான அபிவிருத்தி வலையமைப்பின் தலைவி என்.ஜி.கமலாவதி தெரிவித்துள்ளார்.

நேற்று"வலது குறைந்தோருக்கு அபிவிருத்தியின் கதவைத்திறந்திடுவோம்"என்ற தலைப்பில் மட்டக்களப்பு கோப் இன் சிற்றி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த சந்திப்பினை வலதுகுறைந்த பெண்களுக்கான அமைப்பு,வலது குறைந்தோரின் அபிவிருத்திக்கான வலையமைப்பு என்பன இணைந்து ஏற்பாடுசெய்திருந்தன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வலதுகுறைந்த பெண்களுக்கான அபிவிருத்தி வலையமைப்பின் தலைவி கமலாவதி,அமைச்சுகளுக்கோ திணைக்களங்களுக்கோ சென்று எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசும்போது அவர்கள் சமூகசேவைகள் திணைக்களத்துக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.அனைத்து தரப்பினருக்கும் பொதுவான விடயங்களுக்குள் எங்களையும் உள்வாங்குவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது, பொதுவான விடயங்களுக்கு வேறு யாரும் நிதிகொடுப்பதில்லை.ஆனால் எங்களுக்கானவற்றை பெற்றுக்கொள்வதற்கு தனியாக நாங்கள் நிதிகொடுக்கவேண்டிய நிலையுள்ளதாக கூறினார்.

பொலநறுவை,அனுராதபுரம் மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மூன்று வருட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் இதனூடாக 600.வலுவிழந்த பெண்களை இணைத்து அவர்களது வாழக்கைதரத்தை மேன்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!